taking selfie on railway track தண்டவாளத்தில் செல்பி எடுக்கும் மோதிய ரயில் ஆனா இதுதான் அதிர்ஷ்டம் வீடியோ பாருங்க உங்களுக்கு புரியும்
taking selfie on railway track

taking selfie on railway track
துருக்கி நாட்டில் உள்ள அடானாவில் உள்ள பொசான்டி மாவட்டத்தில் உள்ள பெலேமெடிக் பகுதியில் ஒரு பெண் தனது நண்பர்களுடன் ரயில் தண்டவாளத்தில் அருகே நின்றபடி தனது செல்போனில் செல்ஃபி புகைப்படம் எடுத்த போது அவர் கைமீது ரயில் மோதும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனாலும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒன்றும் ஆகவில்லை, ஆனால் அந்தப் பெண் அவரது நண்பர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.
இது போல் ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுப்பது , ரீல்ஸ் எடுப்பது என்பது அபாயகரமான விஷயமாகும், மேலும் உங்கள் உயிருக்கு ஆபத்தானது, மேலும் தண்டனைக்குரிய குற்றமாகும் இந்தியாவில் ரயில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் 500 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.அதேபோல் ரயில் தண்டவாளங்களில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்தால் 2,000 அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும்