viral video 2 நாட்களாக தார் டிரம்மில் சிக்கி தவித்த தொழிலாளி முழு விவரம்
viral video 2 நாட்களாக தார் டிரம்மில் சிக்கி தவித்த தொழிலாளி முழு விவரம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பீகாரைச் சேர்ந்த 40 வயது கூலித் தொழிலாளியும் பணி புரிந்து வந்துள்ளார் இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி அங்கிருந்த தார் டிரம் மீது விழுந்தார்.

வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டதால் கூச்சலிட்டார்.ஆனால் அங்கிருந்த எந்திரங்களின் சத்தத்தில் அவரது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.
கடந்த 2 நாட்களாக கூச்சலிட்ட அவர் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சத்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பின் போலீசார் வந்து போராடி தொழிலாளியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.