viral videosTamilNadu News
water flows from nailed tree திருப்பூரில் ஆணி அடிக்கப்பட்ட மரத்தில் வடிந்த தண்ணீர் வைரல் வீடியோ

திருப்பூரில் ஆணி அடிக்கப்பட்ட மரத்தில் வடிந்த தண்ணீர் வைரல் வீடியோ
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மூலனூர் சாலையில இருக்கும் ஒரு மரத்தில் திடீரென தண்ணீர் வடிந்தது. பேரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மரத்தில் ஆணிகள் அடித்து விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்த தன்னார்வ அமைப்பினர் அந்த மரத்தில் அடிக்கபட்டுள்ள ஆணிகளை அகற்றி உள்ளனர் , உடனே ஆணி அகற்றிய துளையிலிருந்து சுமார் அரை மணி நேரம் தண்ணீர் வடிந்தது.
இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். மேலும் இதை தொடர்ந்து சாலையோர மரங்களில் ஆணிகள் அடிப்பது போன்ற செயல்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
வைரல் வீடியோ பார்க்க: