woman lost hand by hair dryer blast ஹேர் டிரையர் வெடித்ததில் ஒரு கையை இழந்த பெண் முழு விவரம்

ஹேர் டிரையர் வெடித்ததில் ஒரு கையை இழந்த பெண் முழு விவரம்
கர்நாடக மாநிலத்தில் பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி கணவரை இழந்த இவர் தனியாக வாழ்ந்து வருகிரார்.
இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சசிகலா, ஆன்லைனில் ஹேர் டிரையர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.ஹேர் டிரையர் கூரியர் மூலம் வந்தது அப்போது சசிகலா வீட்டில் இல்லை. பார்சல் கொண்டு வந்தவர் நபர் செல்போன் மூலம் சசிகலாவை தொடர்பு கொண்ட போது தான் வெளியூர் வந்து விட்டதாக கூறி உள்ளார் மேலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஸ்வரிடம் ஹேர் டிரையரை டெலிவரி செய்யுமாறு கூறியுள்ளார்.

அந்த ஹேர் ட்ரையரை வாங்கிய ராஜேஸ்வரி அதை சோதனை செய்து பார்த்துள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஹேர் டிரையர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் கைகள் மற்றும் விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் மருத்துவர்கள் ராஜேஸ்வரியின் ஒரு கை செயல் இழந்ததாக கூறினர். இதனால் அந்த கை துண்டிக்கப்பட்டதாக கூறினர் . தற்போது ராஜேஸ்வரி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடிந்தால் சீமந்தம் மோட்டார் பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி கர்ப்பிணி உயிரிழந்தார்