women constable refuse to pay for ticket பஸ்சில் ரூ50 டிக்கெட் எடுக்க மறுத்த பெண் காவலர் செயலால் இரு மாநிலங்கள் இடையே ஏற்பட்ட அபராத மோதல்
பஸ்சில் ரூ50 டிக்கெட் எடுக்க மறுத்த பெண் காவலர் செயலால் இரு மாநிலங்கள் இடையே எற்பட்ட அபராத மோதல்
கடந்த அக்.22-ம் தேதி ராஜஸ்தான் அரசுப் பேருந்தில் ஜெய்ப்பூரில் இருந்து ஹரியானாவின் தர்ஹரா செல்ல (ஹரியானாவை சேர்ந்த) பெண் காவலர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.
அப்பெண்காவலரிடம் நடத்துனர் பயண டிக்கெட் கட்டணமாக 50 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் தான் ஒரு அரசு ஊழியர் என்று கூறி பெண் காவலர் டிக்கெட் எடுக்க மறுத்துள்ளார்.இதற்கு நடத்துநர், ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு இலவசப் பயணம் இல்லை என கூறியுள்ளார்.
women constable refuse to pay for ticket
அதன் பிறகும் பெண் காவலர் டிக்கெட் வாங்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டு பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டது. பயணிகள் எடுத்து கூறியும் அந்த பெண் காவலர் பயணச்சீட்டு வாங்கவில்லை, மேலும் பேருந்தை விட்டு இறங்கவும் இல்லை. இறுதியில் வேறு வழி இன்றி பெண் காவலருக்காக அந்த பஸ்சில் இருந்த பயணி ஒருவர் ரூ.50 கொடுத்து பயணச்சீட்டு வாங்கியதால் நிறுத்தப்பட்ட பஸ் அங்கிருந்து புறப்பட்டது.
நடந்த சம்பவத்தை அறிந்த ஹரியானா போக்குவரத்து போலீஸார், இதை தங்கல் மாநிலத்திற்க்கு ஏற்ப்பட்ட அவமானமாக கருதி தர்ஹராவுக்கு வந்த சுமார் 90 ராஜஸ்தான் அரசுப் பேருந்துகளுக்கு ஏதோ ஒரு விதிமீறலை காரணம் காட்டி அபராதம் விதித்து ரசீது அனுப்பியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜஸ்தான் போக்குவரத்து போலீஸார் தங்கள் மாநிலத்திற்கு வந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட ஹரியானா அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதித்ததுடன் 8 பேருந்துகளை காவல் நிலையங்களில் நிறுத்தி வைத்தனர் .
மேலும் இதுகுறித்து ராஜஸ்தான் அரசுப் போக்குவரத்து நிர்வாக இயக்குநர் கூறுகையில், பேருந்தில் பெண் காவலர் வாக்குவாதம் நடந்த மறுநாளில் இருந்துதான் ராஜஸ்தான் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் நடத்துநர் மீது எந்த தவறும் இல்லை என கூறி அதை எழுத்துப்பூர்வமாகவும் ஹரியானா அரசிடம் அனுப்ப உள்ளோம். என்றார்.
இரு மாநில போக்குவரத்து போலீஸாரின் இந்த அபராத மோதல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து இதற்கு காரணமான பெண் காவலரின் வாக்குவாதத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது.
வீடியோ பார்க்க: