youth arrested for prank video in govt hospital அரசு மருத்துவமனை வளாகத்தில் பிராங்க் செய்து வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் கைது வைரல் வீடியோ

அரசு மருத்துவமனை வளாகத்தில் பிராங்க் செய்து வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் கைது வைரல் வீடியோ
தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் ஒருவர் தனது கையில் அடிபட்டது போல கட்டுபோட்டுக் கொண்டு மற்றும் ஒரு நபர் ஆபரேசன் தியேட்டர் எங்கு உள்ளது கேட்டு அந்த தியேட்டரில் அமரன் வேட்டையன் படம் ஓடுகிறதா என்று பொதுமக்களிடம் கேள்வி கேட்டு Prank வீடியோ எடுத்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பீர்முகம்மது (30) மற்றும் சேக் முகம்மது (27) ஆகிய இருவரும் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் தனது கையில் அடிபட்டது போல கட்டு போட்டுக்கொண்டு பிராங்க் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.
வீடியோ பார்க்க:
youth arrested for prank video in govt hospital