youth dies after ac falls from 3rd floor 3வது மாடியில் இருந்து இளைஞர் மீது விழுந்த ஏசி சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்த சோகம் சிசிடிவி வீடியோ

3வது மாடியில் இருந்து இளைஞர் மீது விழுந்த ஏசி சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்த சோகம் சிசிடிவி வீடியோ
டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள டோரிவலன் பகுதியில் ஸ்கூட்டரில் ஜிதேஷ் என்ற 19 வயது இளைஞர் தனது பைக்கில் அமர்ந்து நண்பனான பிரன்ஷுடன் பேசிக் கொண்டிருந்தபோது கட்டடத்தின் 3வது மாடியில் இருந்து ஏசி கீழே விழுந்தது. அப்போது, தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த ஜிதேஷ் என்ற 19 வயது இளைஞரின் தலை மீது ஏசி விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த ஜிதேஷ் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த பதறவைக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது .
பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 125(ஏ) (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) மற்றும் 106 (அலட்சியத்தால் மரணம்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தடயவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடந்து வருகிறது, என்று கூறப்படுகிறது .
வீடியோ பார்க்க :