youth gives cpr for snake பாம்புக்கு CPR கொடுத்து உயிர் காத்த இளைஞர் வைரல் வீடியோ
பாம்புக்கு CPR கொடுத்து உயிர் காத்த இளைஞர் வைரல் வீடியோ
குஜராத் மாநிலம் வதோதராவில் வனவிலங்கு மீட்புப் பணியாளராக இருப்பவர் யாஷ் தத் . அப்பகுதியில் பாம்பு இறந்து கிடப்பதாக ஹெல்ப்லைன் எண் மூலம் தகவல் வந்ததை அடுத்து அங்கு சென்ற யாஷ், சுமார் 1 1/2 அடி நீளமுள்ள விஷமற்ற பாம்பினை பார்த்தார்.
பாம்பு எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளது ஆனால் அது உயிர் பிழைக்கும் என்ற நம்பிகையில் அந்த பாம்பை கையில் எடுத்து, அதன் வாயைத் திறந்து ஊதி சுயநினைவுக்கு கொண்டுவர முயற்சித்தார் பின் . முதல் இரண்டு முறை CPR கொடுத்த போது அதன் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மூன்றாவது முறை CPR கொடுத்தபோது, அது அசையத் தொடங்கியது . மரணத்தில் இருந்து மீட்கப்பட்ட அந்த பாம்பு வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
யாஷ் தத் பாம்புக்கு (CPR) சிபிஆர் எனப்படும் உயிர்காக்கும் நுட்பத்தை செய்து அதன் உயிரை காப்பாற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
youth gives cpr for snake