youth slips in waterfall while making reels நீர்வீழ்ச்சியின் உச்சியில் நின்று ரீல்ஸ் எடுத்த நபர் 115அடி பள்ளத்தில் விழுந்த பதறவைக்கும் வீடியோ

நீர்வீழ்ச்சியின் உச்சியில் நின்று ரீல்ஸ் எடுத்த நபர் 115அடி பள்ளத்தில் விழுந்த பதறவைக்கும் வீடியோ
பல இடங்களில் பரவலாக கன மழை பெய்து வரும் நிலையில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது மேலும் ஆறுகள் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா மாவட்டம் மேனல் நீர்வீழ்ச்சிக்கு பைரவா என்ற 26 வயது வாலிபர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது பைரவாவும் அவரது நண்பர் ஒருவருடன் நீர் வீழ்ச்சியின் உச்சியில் ஒரு பாறையின் மேல் நின்று கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்தனர்.

உடனே அங்கு கட்டியிருந்த தடுப்பு கயிற்றை பிடித்துக்கொண்டு, நண்பர்கள் உதவியுடன் தப்ப முயன்றார் ஆனால் கனமழை காரணமாக அருவியில் நீரோட்டம் அதிகரித்து இருந்ததால் பைரவா நீரில் இழுத்து செல்லப்பட்டு சுமார் 115 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் பைரவாவின் உடலை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க :